மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்,
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – குறள்: 945
- அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
கலைஞர் உரை
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை, ஒருவன் தன் விருப்பத்திற்கு இடங்கொடாது மேலும் இரு கவளத்திற்கு வயிற்றில் இடமிருக்குமளவு குறைத்து உண்பானாயின், அவனுயிர்க்கு நோயினால் துன்பமுறுதல் இராது.
மு. வரதராசனார் உரை
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
Be the first to comment