மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. – குறள்: 603
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் அறிவிலி பிறந்தகுடி; அவனினும் முற்பட அழிந்து போம்.
மு. வரதராசனார் உரை
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.
G.U. Pope’s Translation
Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himself.
– Thirukkural: 603, Unsluggishness, Wealth
Be the first to comment