குருவிரொட்டி இணைய இதழ்

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் – குறள்: 608


மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
– குறள்: 608

– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் அமையின்; அது அவனைத்தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும்.



மு. வரதராசனார் உரை

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.



G.U. Pope’s Translation

If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.

 – Thirukkural: 608, Unsluggishness, Wealth