
மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள். – குறள்: 617
– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்; திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள் என்று சொல்லுவர் அறிந்தோர்.
மு. வரதராசனார் உரை
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
G.U. Pope’s Translation
In sluggishness is seen misfortune’s lurid form, the wise declare;
Where man unslothful toils, she of the lotus flower is there!
– Thirukkural: 617, Manly Effort, Wealth
Be the first to comment