குருவிரொட்டி இணைய இதழ்

மடிஇலா மன்னவன் எய்தும் – குறள்: 610


மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
– குறள்: 610

– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன்,
அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சோம்பலில்லாத அரசன் ‘கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருமிக்க அடைவான்.



மு. வரதராசனார் உரை

அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.



G.U. Pope’s Translation

The king whose life from sluggishness is rid,
Shall rule o’er all by foot of mighty god bestrid.

 – Thirukkural: 610, Unsluggishness, Wealth