குருவிரொட்டி இணைய இதழ்

மையல் ஒருவன் களித்தற்றால் – குறள்: 838


மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கைஒன்று உடைமை பெறின்.
– குறள்: 838

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில்
ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதையானவன் தன் கையில் ஒரு சிறந்தபொருளை உடைமையாகப் பெற்றிருந்தால்; அது ஏற்கெனவே பித்துக் கொள்ளியான ஒருவன் அதன் மேலுங் கள்ளுண்டு மயங்கினாற்போலும். ‘பெறின்’ எனவே,அது சொந்த தேட்டன்றித் தெய்வத்தினால் வந்தமை பெறப்பட்டது. பேதைமையும் செல்வமயக்கும் ஒருங்கேயுடையவன் பித்தமும் கள்வெறியும் ஒருங்கே கொண்டவன்போல்,தலைகால் தெரியாமல் தடுமாறிக் கெடுவன் என்பதாம். இக்குறளால் பேதை பெற்ற செல்வம் அவன் பேதைமையையே மிகுக்கு மென்பது கூறப்பட்டது. ‘ஆல்’ அசைநிலை.



மு. வரதராசனார் உரை

பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும்.



G.U. Pope’s Translation

When folly’s hand grasps wealth’s increase, ’twill be As when a mad man raves in drunken glee.

Thirukkural: 838, Folly, Wealth