மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65
– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்
கலைஞர் உரை
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பெற்றோர்க்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம்; அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம்.
மு. வரதராசனார் உரை
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.
G.U. Pope’s Translation
To parent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.
– Thirukkural: 65, The Wealth of Children, Virtues