மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல். – குறள்: 1071
– அதிகாரம்: கயமை, பால்: பொருள்
கலைஞர் உரை
குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கீழ்மக்கள் வடிவால் முற்றும் மேன்மக்களை ஒத்திருப்பர்; அவர் மேன்மக்களை யொத்திருத்தற் போன்ற வொப்பை வேறெந்த ஈரினத்திடையும்யாம் கண்டதில்லை.
மு. வரதராசனார் உரை
மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
G.U. Pope’s Translation
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them i’ve never seen.
– Thirukkural: 1071, Baseness, Wealth
Be the first to comment