மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3
– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்
கலைஞர் உரை
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர்
அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.
மு.வரதராசனார் உரை
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
G.U. Pope’s Translation
His Feet, ‘who o’er the full- blown flower hath past,’ who gain
In bliss long time shall dwell above this earthly plain.
– Thirukkural: 3, The Praise of God, Virtues