மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் – குறள்: 457

Thiruvalluvar

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
– குறள்: 457

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்



கலைஞர் உரை

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ
எல்லாப் புகழையும் வழங்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இன நன்மை எல்லா வகையிலும் புகழை உண்டாக்கும்.



மு. வரதராசனார் உரை

மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain.

 – Thirukkural: 457, Avoiding mean Associations, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.