குருவிரொட்டி இணைய இதழ்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் – குறள்: 901


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
குறள்: 901

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இன்பம் பற்றி மனைவியை அளவறிந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார்; இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார்,அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே.



மு. வரதராசனார் உரை

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.



G.U. Pope’s Translation

Who give their soul to love of wife acquire not nobler gain:
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

Thirukkural: 901, Being led by Women, Wealth.