மனையாளை அஞ்சும் மறுமை – குறள்: 904

Thiruvalluvar

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினைஆண்மை வீறுஎய்தல் இன்று.
குறள்: 904

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த
அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினைமுயற்சி வெற்றிபெறுவதில்லை.



மு. வரதராசனார் உரை

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.



G.U. Pope’s Translation

No glory crowns e’en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.

Thirukkural: 904, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.