மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும். – குறள்: 455
– அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான்
அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் செயல் தூய்மையும் ஆகிய இரண்டும்; இனத் தூய்மையைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றும்.
மு. வரதராசனார் உரை
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.
G.U. Pope’s Translation
Both purity of mind, and purity of action clear, Leaning no staff of pure companionship, to man draw near.
– Thirukkural: 455, Avoiding mean Associations, Wealth