மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. – குறள்: 456
– அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்
கலைஞர் உரை
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்
நற்செயல்களும் விளையும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும்.
மு. வரதராசனார் உரை
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
G.U. Pope’s Translation
From true pure-minded men a virtuous race proceeds; To men of pure companionship belong no evil deeds.
– Thirukkural: 456, Avoiding mean Associations, Wealth