மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். – குறள்: 453
– அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்
இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொருத்து அமையும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.
மு. வரதராசனார் உரை
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
G.U. Pope’s Translation
Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known.
– Thirukkural: 453, Avoiding mean Associations, Wealth
Be the first to comment