மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று. – குறள்: 825
– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி
எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை;எத்தகைய வினையிலும்; அவர் சொல்லைக்கொண்டு அவரை நம்பத்தக்க முறைமைத்தன்று அரசியல் நூல்.
மு. வரதராசனார் உரை
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
G.U. Pope’s Translation
When minds are not in unison, ‘its never just,
In any words men speak to put your trust.
– Thirukkural: 825, Unreal Friendship, Wealth
Be the first to comment