மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்: 60
– அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம்
கலைஞர் உரை
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும்
சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
ஞா. தேவநேயப் பாவாணர்
மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; நல்ல அறிவுடை மக்கட்பேறு அதற்கு அணிகலமாவது, என்று கூறுவர் அறிந்தோர்.
மு.வரதராசனார் உரை
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.
G.U. Pope’s Translation
The house’s ‘blessing’, men pronounce the house – wife excellent;
The gain of blessed children is its goodly ornament.
– Thirukkural: 60, The Goodness of the help to Domestic Life, Virtues
Be the first to comment