மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண். – குறள்: 742
– அதிகாரம்: அரண், பால்: பொருள்
கலைஞர் உரை
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்
மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே
அரணாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய அகழிநீரும்; அதனையடுத்த வெறு நிலமும்; அதனையடுத்த குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடும்; அதனையடுத்த பல நீள் மலையும்; தனக்கு முன்னாக முறையே உடையதே சிறந்த மதிலரணாவது.
மு. வரதராசனார் உரை
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.
G.U. Pope’s Translation
A fort is that which owns a fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near.
– Thirukkural: 742, The Fortification, Wealth
Be the first to comment