மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு – குறள்: 244


மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை. – குறள்: 244

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மற்ற உயிர்களையெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு; தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர்.



மு. வரதராசனார் உரை

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.



G.U. Pope’s Translation

Who for undying souls of men provides with gracious zeal. In his own soul the dreaded guilt of sin shall never feel.

 – Thirukkural: 244, The Possession of Benevolence, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.