மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. – குறள்: 587
– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களையும் அவர்க்கு உள்ளாளரைக் கேட்டறிய வல்லனாகி ; தான் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றலுள்ளவனே சிறந்த ஒற்றனாவான்.
மு. வரதராசனார் உரை
மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
G.U. Pope’s Translation
A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.
– Thirukkural: 587, Detectives, Wealth
Be the first to comment