குருவிரொட்டி இணைய இதழ்

மறந்தும் பிறன்கேடு சூழற்க – குறள்: 204


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

– குறள்: 204

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி
நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.



மு. வரதராசனார் உரை

பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.



G.U. Pope’s Translation

Though good thy soul forget, plot not thy neighbour’s fall, Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall.

 – Thirukkural: 204, Dread of Evil Deed, Virtues