குருவிரொட்டி இணைய இதழ்

மறவற்க மாசுஅற்றார் கேண்மை – குறள்: 106


மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்புஆயார் நட்பு
– குறள்: 106

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை
நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க, மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.



மு. வரதராசனார் உரை

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.



G.U. Pope’s Translation

Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!

 – Thirukkural: 106,The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues