குருவிரொட்டி இணைய இதழ்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை – குறள்: 968


மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடுஅழிய வந்த இடத்து.
– குறள்: 968

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.



கலைஞர் உரை

சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது
உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை
மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்குடிப்பிறப்புத் தன் பெருமிதமாகிய மானங்கெட வந்தவிடத்து; இறவாது நின்று இகழ்வாரை வேண்டிப் பொருள் பெற்று இழிந்தவுடம்பைக் காக்கும் வாழ்க்கை பின்பும் இறவாமலிருத்தற்கு மருந்தாகுமோ! ஆகாதே!



மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?



G.U. Pope’s Translation

When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?

Thirukkural: 968, Honour, Wealth.