குருவிரொட்டி இணைய இதழ்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு – குறள்: 636


மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை.
– குறள்: 636

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயற்கையான நுண்மதியைச் செயற்கையான நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு; சூழ்ச்சிக் கெட்டாத மிக நுண்ணிய செய்திகளாக எதிர்நிற்பவை எவை உள? எதுவுமில்லை.



மு. வரதராசனார் உரை

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?



G.U. Pope’s Translation

When native subtilty combines with sound scholastic lore, ‘Tis subtilty surpassing all , which nothing stands before.

 – Thirukkural: 636, The Officeof Minister of State, Wealth