மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். – குறள்: 280
– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்
கலைஞர் உரை
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை.
மு. வரதராசனார் உரை
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக் கோலங்களும் வேண்டா.
G.U. Pope’s Translation
What’s the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?
– Thirukkural: 280, Inconsistent Conduct, Virtues
Be the first to comment