மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர். – குறள்: 973
– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர்
அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறப்பொடு தொடர்புள்ள சிலர் குலப் பிரிவினையால் ஏற்பட்ட குமுகாயப் படிமுறை யொழுங்கில் உச்சியிலிருந்தும், ஒழுக்கங் கெட்டவராயின் உயர்ந்தோரல்லர்; உண்மையாகத்தாழ்ந்தவ ரல்லாத மக்கள், பிறரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவராகார்.
மு. வரதராசனார் உரை
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
G.U. Pope’s Translation
The men of lofty line, whose souls are mean, are never great; The men of lowly birth, when high of soul, are not of low estate.
– Thirukkural: 973, Greatness, Wealth.
Be the first to comment