மிகச்செய்து தம்எள்ளு வாரை – குறள்: 829

Thiruvalluvar

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
– குறள்: 829

– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகைமை தோன்றாவாறு புறத்தில் அளவிறந்து நட்புச்செய்து அகத்தில் தம்மை இழிவாயெண்ணும் பகைவரை; தாமும் புறத்தே நட்பாடி அவர் மகிழும் வண்ணம் செய்து; அகத்தே அந்நட்புச் சாகும் வண்ணம் பொருந்தும் பான்மையுடையது அரசியன் முறை.



மு. வரதராசனார் உரை

புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத், தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்.



G.U. Pope’s Translation

‘Tis just, when men make much of you, and then despise, To make them smile, and slap in friendship’s guise.

Thirukkural: 829, Unreal Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.