குருவிரொட்டி இணைய இதழ்

மிகினும் குறையினும் நோய்செய்யும் – குறள்: 941


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
குறள்: 941

– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்.



கலைஞர் உரை

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள
மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய்
உண்டாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மருத்துவ நூலார் ஊதை(வாதம்) முதலாக எண்ணிய முக்கூறுகளும்; தாம் இருக்க வேண்டிய அளவிற்குக் கூடினாலும் குறைந்தாலும் உடம்பிற் பல்வேறு நோய்களை உண்டுபண்ணும்.



மு. வரதராசனார் உரை

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.



G.U. Pope’s Translation

The learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail, it will cause disease.

Thirukkural: 941, Medicine, Wealth.