மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். – குறள்: 158
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; தாம் தம் பொறையினால் வென்று விடுக.
மு. வரதராசனார் உரை
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
G.U. Pope’s Translation
With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.
– Thirukkural: 158, The Possession of Patience, Forbearance, Virtues
Be the first to comment