மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. – குறள்: 90
– அதிகாரம்: விருந்தோம்பல் பால்: அறம்
கலைஞர் உரை
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இயல்பாக மென்மையாகவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப்படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும்; ஆனால், தன்மானமுள்ள விருந்தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.
மு.வரதராசனார் உரை
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
G.U. Pope’s Translation
The flower of ‘Anicha’ withers away,
if you but its fragrance inhale;
If the face of the host cold welcome convey,
the guest’s heart within him will fail.
– Thirukkural: 90, Hospitality, Virtues
Be the first to comment