முகநக நட்பது நட்பன்று – குறள்: 786

முகநக நட்பது நட்பன்று

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
– குறள்: 786

– அதிகாரம்: நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

இன்முகம்  காட்டுவது  மட்டும்  நட்புக்கு  அடையாளமல்ல:  இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர்

கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பதே உண்மையான நட்பாவது.



மு.வரதராசனார் உரை

முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.



G.U. Pope’s Translation

Not the face’s smile of welcome shows the friend sincere, But the heart’s rejoicing gladness when the friend is near.

– Thirukkural: 786, Friendship, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.