முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார். – குறள்: 691 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோலஅதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; [ மேலும் படிக்க …]
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்பெற்றத்தால் பெற்ற பயன். – குறள்: 524 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும்வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment