முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும். – குறள்: 824
– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு
அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து உள்ளத்தில் எப்போதும் தீயவராகிய வஞ்சகருக்கு; அஞ்சி விலகிக் கொள்ளல் வேண்டும்.
மு. வரதராசனார் உரை
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.
G.U. Pope’s Translation
‘Tis fitting you should dread dissemblers’ guile, Whose hearts are bitter while their faces smile.
– Thirukkural: 824, Unreal Friendship, Wealth
Be the first to comment