முறைகோடி மன்னவன் செய்யின் – குறள்: 559

Thiruvalluvar

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
– குறள்: 559

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்
இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி
வைத்து வளம் பெறவும் இயலாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் ; அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம்பொழிதலைச் செய்யாது.



மு. வரதராசனார் உரை

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.



G.U. Pope’s Translation

Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

 – Thirukkural: 550, The Cruel Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.