முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும். – குறள்: 492
– அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும் ; அரணைச் சேர்ந்ததனாலுண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும் .
மு. வரதராசனார் உரை
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்.
G.U. Pope’s Translation
Though skill in war combine with courage tried on battle – field,
The added gain of fort doth great advantage yeild.
– Thirukkural: 492, Knowing the Place, Wealth