குருவிரொட்டி இணைய இதழ்

முற்றியும் முற்றாது எறிந்தும் – குறள்: 747


முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.
– குறள்: 747

– அதிகாரம்: அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச்
சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் சூழ்ந்தும்; அங்ஙனம் சூழாது மதிலின் இளந்த இடம்நோக்கி ஒன்றுதிரண்டு முனைந்து பொருதும்; அமைச்சரையும் படைத்தலைவரையும் அவர்க்கு வேண்டியவரை விடுத்துப் பெறும் பொருள் கொடுத்து வயப்படுத்திக் கோட்டைவாயிலைத் திறக்கச் செய்தும்; உழிஞையாராற் கைப்பற்ற முடியாததே; சிறந்த கோட்டை யரணாவது.



மு. வரதராசனார் உரை

முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.



G.U. Pope’s Translation

A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.

 – Thirukkural: 747, The Fortification, Wealth