முற்றுஆற்றி முற்றி யவரையும் – குறள்: 748

Thiruvalluvar

முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றி
பற்றியார் வெல்வது அரண்.
– குறள்: 748

– அதிகாரம்:அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து
கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

படைப்பெருமையால் வளைதல் வல்லவராய் வந்து வளைந்த உழிஞையாரையும்; மதிலரணைப் பற்றிநின்ற நொச்சியார் சிறுபடையினராயினும் தாம் பற்றிய விடத்தைவிட்டு அகலாது நின்று பொருது வெல்வதற்கு இடமானதே;சிறந்த கோட்டையரணாம்.



மு. வரதராசனார் உரை

முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.



G.U. Pope’s Translation

Howe’er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within.

 – Thirukkural: 748, The Fortification, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.