குருவிரொட்டி இணைய இதழ்

நச்சப் படாதவன் செல்வம் – குறள்: 1008


நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
– குறள்: 1008

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு
மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரால் விரும்பப்படாதவன் செல்வ முடையவனாயிருத்தல்; ஊர் நடுவில் எட்டி மரம் பழுத்தாற் போலும்.



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

When he whom no man loves exults in great prosperity, ‘Tis as when fruits in midmost of the town some poisonous tree.

 – Thirukkural: 1008, Wealth without Benefaction, Wealth