நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. – குறள்: 791
– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்
கலைஞர் உரை
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து
விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நட்பை நிலையாகக் கைக்கொள்ள விரும்பியவர்க்கும் வேண்டியவர்க்கும், ஒருவரோடு நட்புச்செய்தபின் அவரைவிட்டு விலகுதல் இயலாது; ஆதலால், ஆராயாது நட்புச்செய்தல் போலக் கேடுதருவது வேறொன்றும் இல்லை.
மு. வரதராசனார் உரை
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.
G.U. Pope’s Translation
To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endure.
– Thirukkural: 791, Investigation formatting Friendships, Wealth