குருவிரொட்டி இணைய இதழ்

நாடுஎன்ப நாடா வளத்தன – குறள்: 739

நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல
நாட வளம்தரும் நாடு.
– குறள்: 739

அதிகாரம்: நாடு, பால்: பொருள்


கலைஞர் உரை

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நாடென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பிறநாட்டுப் பொருள்களின் தேவையின்றித் தமக்கு வேண்டிய பொருள் வளமெல்லாம் தம்மகத்தே கொண்டன; இங்ஙனமன்றிப் பிறநாட்டுப் பொருள்களை நாடிப்பெற்று அதனால் வளம் பெறும் நாடுகள் நாடுகளாகா. பிறநாட்டுப் பொருள்களை நாடுமாறு குன்றிய வளந்தரு நாடுகள் என்றுரைப்பினுமாம். எல்லா வகையிலும் தன்னிறைவானதே தலைசிறந்த நாடென்பது கருத்து.


மு.வரதராசனார் உரை

முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் அல்ல


G.U. Pope’s Translation

That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought.

 – Thirukkural: 739, The Land, Wealth