குருவிரொட்டி இணைய இதழ்

நாடோறு நாடுக மன்னன் – குறள்: 520


நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமைக் கோடாது உலகு.
– குறள்: 520

– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்
செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது – அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ; மன்னன் நாள்தோறும் நாடுக – ஆதலால் , அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க.



மு. வரதராசனார் உரை

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.



G.U. Pope’s Translation

Let king search out his servants’deeds each day;
When these do right, the world goes rightly on its way.

 – Thirukkural: 520, Selection and Employment, Wealth