நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமும் ஆங்கே தரும். – குறள்:171
– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்
கலைஞர் உரை
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து பழியும் வந்து சேரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமையில்லாது அவரது நற்செல்வத்தின்மேல் ஒருவன் ஆசைவைப்பின்; அவன் குடிகெட்டு; அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கேதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.
மு. வரதராசனார் உரை
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டு குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.
G.U. Pope’s Translation
With soul unjust to covet others’ well-earned store, Brings ruin to the home, to evil opes the door.
– Thirukkural: 171, Not Coveting, Virtues