நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள்: 784
– அதிகாரம்: நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் சிரித்து மகிழ்வதற்கன்று; இருவருள் ஒருவர் தம் அறிவுக்குறைவால் ஏதேனும் வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை அறிவுநிறைந்த இன்னெருவர் முற்பட்டுக் கடிந்து திருத்தற்பொருட்டே.
மு. வரதராசனார் உரை
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
G.U. Pope’s Translation
Nor for laughter only friendship all the pleasant day. But for strokes of sharp reproving, when from right you stray.
– Thirukkural: 784, Friendship, Wealth