நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்
பிறற்குஉரியாள் தோள் தோயாதார்.– குறள்: 149
– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்
கலைஞர் உரை
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்
பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் ; எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின் ; பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார்.
மு. வரதராசனார் உரை
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
G.U. Pope’s Translation
Who ‘re good indeed, on earth begirt by ocean’s gruesome tide? The men who touch not her that is another’s bride.
– Thirukkural: 149, Not Coveting Another’s Wife, Virtues
Be the first to comment