குருவிரொட்டி இணைய இதழ்

நல்லாறு எனினும் கொளல்தீது – குறள்: 222

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
நல்லாறு எனினும் கொளல்தீது

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்எனினும் ஈதலே நன்று.
– குறள்: 222

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது
பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது; பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாதென்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.



மு. வரதராசனார் உரை

பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.



G.U. Pope’s Translation

Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still.

 – Thirukkural: 222, Giving, Virtues

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link