நாண்அகத்து இல்லார் இயக்கம் – குறள்: 1020

Thiruvalluvar

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
– குறள்: 1020

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும்
மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் மனத்தில் நாணில்லாத மாந்தர் நாணுடையார் போன்றே நடமாடும் நடமாட்டம்; மரத்தினாற் செய்த சிறு படிமை, தன்னை யாட்டும் பொறிக்கயிற்றா லேற்பட்ட தன் ஆட்டத்தினால், தான் உயிருள்ளது போல் தோன்றுமாறு பார்ப்பவர் கண்களை மயக்கினாற் போலும்.



மு. வரதராசனார் உரை

மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.



G.U. Pope’s Translation

‘Tis as with strings a wooden puppet apes life’s functions, when
Those void of shame within hold intercourse with men.

 – Thirukkural: 1020, Shame, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.