குருவிரொட்டி இணைய இதழ்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் – குறள்: 924


நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
குறள்: 924

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு
ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கள்ளுண்டல் ஆகிய பழித்தற்குரிய பெருங் குற்றத்தைச் செய்தவர்க்கு; நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள்.



மு. வரதராசனார் உரை

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.



G.U. Pope’s Translation

Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard’s grievous sin, that all condemn.

Thirukkural: 924, Not Drinking Palm – Wine, Wealth.