நாணாமை நாடாமை நார்இன்மை – குறள்: 833

Thiruvalluvar

நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில்.
– குறள்: 833

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத்தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்; ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்; எவரிடத்தும் அன்பின்மையும்; பேணிக்காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை செயல்களாம்.



மு. வரதராசனார் உரை

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை அகியவை பேதையின் தொழில்கள்.



G.U. Pope’s Translation

Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, ’tis thus the foll will play his part.

Thirukkural: 833, Folly, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.