குருவிரொட்டி இணைய இதழ்

நண்புஆற்றார் ஆகி நயம்இல – குறள்: 998


நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்
பண்புஆற்றா ராதல் கடை.
– குறள்: 998

– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து
கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மொடு நட்புக்கொள்ளாது தமக்குத் தீமையே செய் தொழுகுவாரிடத்தும் ; தாம் பண்புடையராயொழுகாமை அறிவுடையார்க்குக் கடைப்பட்ட குற்றமாம்.



மு. வரதராசனார் உரை

நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.



G.U. Pope’s Translation

Though men with all unfriendly acts and worngs assail,
‘Tis uttermost disgrace in ‘courtesy’ to fail.

 – Thirukkural: 998, Perfectness, Wealth