நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் – குறள்: 113

Thiruvalluvar

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்
– குறள்: 113

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்
கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும்; நடுவுநிலை திறம்புவதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.



மு. வரதராசனார் உரை

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.



G.U. Pope’s Translation

Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e’en one day retain!

 – Thirukkural: 113, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.